Latestமலேசியா

கெரிக்கில் சாலையோரம் வேனுக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்தபோது கார் மோதி இருவர் பலி

கெரிக், ஆகஸ்ட்-19 – பேராக், கெரிக்கில் தாங்கள் பயணித்த வேனில் பெட்ரோல் தீர்ந்துபோனதால், சாலையோரமாக நிறுத்தி எண்ணெய் நிரப்பிய போது, கார் மோதி இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் Tanjung Rambai அருகே Jalan Kuala Kangsar – Gerik சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

இருவரும் வேனில் எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த Proton Wira கார், முன்னாலிருந்த Proton Preve காரை மோதுவதைத் தவிர்க்க முயன்றது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து இடப்பக்கத்தில் வேனில் எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்தவர்களை மோதியது.

அதில், 30 வயது Muhammad Ahyad Mohamad Daud சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; வேன் ஓட்டுநரான 45 வயது Mohd Rozman Ghazali கெரிக் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மற்ற இரு வாகனங்களில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!