
சிரம்பான், ஜூன் 19 – சென்ட்ரியோவில் (Centrio) உள்ள பெர்சியாரன் சிரம்பான் 2 இல் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அதில் கலந்துகொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். இரண்டு நாட்களுக்கு முன் கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் ஆபத்தான ஸ்டன்ட் காட்சிகளை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூடிய காணொளி வைரலாகியது.
2023 ஆம் ஆண்டு மதல் அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையை மாவட்ட போலீஸ் கண்காணித்து வந்ததோடு Op Samseng Jalanan நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஹட்டா சே டின் ( Mohammad Hatta che Din ) தெரிவித்தார். சட்டவிரோத பந்தயங்களினால் இயந்திரம் மற்றும் எக்ஸாஸ்ட் சத்தங்கள் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறப்படுகிறது. 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கிடையில்
Op Samseng Jalanan கீழ் போலீசார் ஆறு நடவடிக்கைகளை அந்தப் பகுதியில் மேற்கொண்டனர்.