Latestமலேசியா

Tahfiz மையத்தில் கைப்பேசிப் பயன்படுத்தத் தடை: விரக்தியில் இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 11 வயது சிறுமி

ஈப்போ, ஏப்ரல் 23 – பேராக்கில், கைப்பேசியைப்  பயன்படுத்தத் தடை  விதிக்கப்பட்ட  விரக்தியில்  இரண்டாவது  மாடியில்  இருந்து குதிக்க முயன்றுள்ளார் 11 வயது சிறுமி ஒருவர்.

கம்பார் அருகே உள்ள tahfiz இஸ்லாமியக் கல்வி மையத்தில் நேற்று காலை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

தகவல் கிடைத்து அங்குச் சென்ற தீயணைப்பு மீட்புத் துறை, சுமார் 4 மீட்டர் உயரக் கட்டடத்தின் இரண்டாவது மாடியின் கூரையில், அச்சிறுமி சோக முகத்துடன் நின்றிருப்பதைக் கண்டது.

எப்படியோ பேசி சமாதனப்படுத்தி ஏழே நிமிடங்களில் அச்சிறுமியை தீயணைப்பு வீர்கள் பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர்.

அந்த tahfiz மையத்திற்கு மாணவர்கள் கைப்பேசி உள்ளிட்ட தகவல்தொடர்புச் சாதனங்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால், அம்மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.

அதற்குப் பேசாமல் கம்பார், கம்போங் பத்து பூத்தேவில் இருக்கும் தனது வீட்டுக்கே சென்றி விடும் முடிவிலும் அவள் இருந்திருக்கிறாள்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட அச்சிறுமி, அவள் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டதைத் தீயணைப்பு மீட்புத் துறை உறுதிபடுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!