சிங்கப்பூர், ஏப்ரல்-2,
உங்கள் ஆர்வக் கோளாறுக்கு அளவே இல்லையா என நெட்டிசன்கள் கேட்கும் அளவுக்கு, taugeh கேக் தயாரிப்பில் ‘வெளுத்து’ வாங்குகிறது சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு கேக் கடை.
April Fool தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் சைவக் கேக்குகள் அதுவும் காய்கறிகளைக் கொண்ட கேக்குகளை அது அறிமுகப்படுத்தியது.
கேக்குகளின் மேல் அலங்காரமாக taugeh எனப்படும் முளைத்தப் பயிர்களை வைத்து அது அசத்தியிருக்கிறது.
பச்சைப் பட்டாணி, அஸ்பாராகுஸ், கேரட், காளான்களையும் கேக் கடை ஊழியர்கள் விட்டு வைக்கவில்லை.
வித்தியாசமாக இருந்தாலும், பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல வண்ணங்களில் கேக்குகள் கண்ணைப் பறிக்கின்றன.
அதிலும் குறிப்பாக பிரமிட் வடிவிலான கேக்கில் பச்சைப் பட்டாணி அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, பார்க்கப் பசுமையாக இருக்கிறது.
அந்த காய்கறி கேக்குகள் மலேசிய ரிங்கிட்டுக்கு 370-தில் இருந்து 518 வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.
கேக் கடையின் புத்தாக்கச் சிந்தனையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டினாலும், taugeh-வைக் கேக்கில் சேர்த்ததை தான் அவர்களில் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Kuey Teow மீயில் இருந்தாலே taugeh-வைச் சாப்பிட மாட்டோம்; இதில் கேக்கில் வைத்துக் கொடுத்தால் வாய்ப்பே இல்லை என பலர் ‘ஆதங்கத்தை’ வெளிப்படுத்தினர்.