
கலிஃபோர்னியா, ஜூன்-6 – பிரபல ஹோலிவூட் நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி (James Handy) கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Top Gun: Maverick மற்றும் Jumanji ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற 81 வயது இந்த மூத்த குணச்சித்திர நடிகர், லோஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நெஞ்சில் குத்தப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக, அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த அவருடைய காதலியின் 44 வயது மகன் Michael Gledhill என்பவரை போலீஸார் சம்பவ இடத்திலேயே கைதுச் செய்துள்ளனர்.
அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, ஜாமீன் தொகையாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில், 140-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முத்திரை பதித்த ஜேம்ஸ் ஹேண்டியின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



