
ஈப்போ, செப்-22-பேராக், Taman Tronoh Baru பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையமொன்றின் கழிவறையில் 39 வயதுடைய உள்ளூர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பிற்பகல் 2.20 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பத்து காஜா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். அங்கு காவல்துறையினரும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் ஏற்கெனவே இருந்ததாக அவர் கூறினார்.
உயிரிழந்த ஆடவர் கழிவறைக் கதவுச் சட்டத்தில் சிக்கி, சுயநினைவின்றிக் கிடந்த நிலையில் காணப்பட்டார். அவர் மரணமடைந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்நபர் கழிவறையைப் பயன்படுத்துவதற்காக அங்கு வந்த ஒருவர் என Sabarodzi Nor Ahmad குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் அந்நபரின் உடலை மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



