Latestமலேசியா

Tuanku Muhrizசை பதவியிலிருந்து நீக்கும் பிரகடனத்துக்கு ஆட்சிக்குழு ஒருமனதாக ஒப்புதல் – நெகிரி செம்பிலான் முதலமைச்சர்

சிரம்பான், செப்-17-நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசார் பதவியிலிருந்து Tuanku Muhriz Tuanku Munawirரை நீக்குவது தொடர்பான பிரகடனத்துக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததாக முதலமைச்சர் Datuk Ismail Lasim உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில நிர்வாக மன்றக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். தற்போதைய விதிமுறைகளின்படி, பிரகடனத்தை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டம் 1959-இன் பிரிவு 11-ன் கீழ், Tuanku Nadzaruddin ibni Almarhum Tuanku Ja’afarரைத் தேர்ந்தெடுப்பது மீதான பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளதாக மாநில மன்ற உறுப்பினர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை நேற்று பகிரப்பட்டிருந்தது.

உண்டாங் யாங் அம்பாட் எடுத்த முடிவு, மாநில அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மரபுகளுக்கு இணங்க முறையானதும் செல்லுபடியாகும் தன்மை கொண்டதுமாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, Tuanku Muhriz பதவியிலிருந்து நீக்கப்பட்டு, Tuanku Nadzaruddin புதிய யாங் டி-பெர்துவான் பெசாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், உண்டாங் யாங் அம்பாட் அமைப்பின் ஆணை மற்றும் முடிவைச் செயல்படுத்துவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!