Latestமலேசியா

UNESCO-வின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலுக்கு மலேசியாவின் நாசி லெமாக்கும் பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச் 9 – UNESCO அமைப்பின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் அந்தஸ்தைப் பெறுவதற்கு, இவ்வாண்டு மலேசியா சார்பில் நாசி லெமாக் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளன.

சரவாக்கில் உள்ள நியா தேசிய பூங்கா குகை வளாகம், மலேசியா கெபாயா ஆடை ஆகியவை ஏனைய இரண்டு பாரம்பரிய அம்சங்களாகும்.

நாட்டின் புராதன -பாரம்பரிய அம்சங்களை விளம்பரப்படுத்தும் கடப்பாட்டுக்கு ஏற்ப அம்மூன்று அம்சங்களும் முன்மொழியப்பட்டிருப்பதாக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

ஐ.நாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான UNESCO-வின் அந்த முன்மொழிவுப் பட்டியலில் அவை இடம் பெற்றிருப்பதை அடுத்து, இந்த 2024-ங்காம் ஆண்டு மலேசியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய ஆண்டாக விளங்கும் என்றார் அவர்.

நாசி லெமாக் உள்ளிட்ட மலேசியாவின் காலை பசியாறை உணவு கலாச்சாரம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதானது, மக்களின் பாரம்பரிய உணவு தேசிய பாரம்பரிய உணவாக அங்கீகரிப்படுவதை உறுதிச் செய்யும் செயலாகும்.

அதே வேளை, மற்ற நாடுகள் அதற்கு உரிமை கோராதிருப்பதையும் அதன் மூலம் உறுதிச் செய்ய முடியும் என அமைச்சர் சொன்னார்.

மலாய்க்காரப் பெண்கள் அணியும் Kebaya Malaysia ஆடை, அண்டை நாடுகளான புருணை, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகியவற்றுடன் இணைந்து பரிந்துரைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!