Latestமலேசியா

USM முன்னாள் துணை வேந்தரைத் தாக்கியவனுக்கு 13 குற்றப்பதிவுகள்; விசாரணையில் அம்பலம்

ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-18,

ஒரு கொள்ளை முயற்சியில், USM பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் Tan Sri Dzulkifli Abdul Razak-க்கைத் தாக்கிய சந்தேகத்தில் கைதான ஆடவனுக்கு, ஏற்கனவே 13 குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் 10 குற்றப்பதிவுகள் போதைப்பொருள் தொடர்பானவை; எஞ்சிய மூன்றும் குற்றவியல் சம்பந்தப்பட்டவை என பினாங்கு போலீஸ் கூறியது.

52 வயது அந்நபர் விசாரணைக்காக இன்று முதல் தடுத்து வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

74 வயது Tan Sri Dzulkifli காலை 6.45 மணிக்கு மசூதியில் இருந்து வீடு திரும்பியபோது ஏதோ ஒரு கருப்பு பொருளை ஆயுதமாக ஏந்திய நபரால் தாக்கப்பட்டார்.

இதனால் உதவிக் கோரி அவர் கூச்சலிட்டதும் சந்தேக நபர் பயத்தில் வேலி ஏறி குதித்து தப்பினார்.

அண்டை வீட்டார் துரத்தியும் அவனைப் பிடிக்க முடியவில்லை.

தலையில் காயமடைந்த Dzulkifli அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!