Latestமலேசியா

UTC Pudu பாஸ்போர்ட் உறை விவகாரம்: குடிநுழைவு துறை போலீசில் புகார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – UTC Pudu குடிநுழைவு துறை அலுவலகத்தில் பாஸ்போர்ட் அதாவது கடப்பிதழ் உறையை திருடியதாக தன்னை அவமானப்படுத்தி குற்றம் சாட்டியுள்ளனர் என்று பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவம் தொடர்பாக குடிநுழைவு துறை போலீஸ் புகார் அளித்துள்ளது.

அந்தப் பெண், புதிய பாஸ்போர்ட்டுடன் வழங்கப்பட்டதாக நினைத்து பாஸ்போர்ட் உறையை தவறுதலாக எடுத்ததாகவும், அதிகாரிகள் தன்னை திருட்டுக் குற்றம் சாட்டியதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து CCTV பதிவுகள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் வாக்குமூலங்களை குடிநுழைவு துறை ஆய்வு செய்தது. வைரலான பதிவில் கூறப்பட்ட சில தகவல்கள் CCTV மற்றும் அதிகாரிகளின் விளக்கங்களுடன் ஒத்துப்போகவில்லை என குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ’ சாக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) தெரிவித்தார்.

சம்பவத்தின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!