
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கோலாலம்பூர் செத்தியாவங்சா, ஜாலான் ரெஜாங் பகுதியிலுள்ள திறந்தவெளி காலை சந்தையைச் சுற்றியுள்ள பொதுச் சாலை ஒதுக்கீட்டுப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 18 கட்டமைப்புகளை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL நேற்று இடித்தது.
DBKL, காவல்துறை, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் Air Selangor ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் இரு நடவடிக்கைகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய, பொதுச் சாலை ஒதுக்கீட்டில் அனுமதியின்றி கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புக்கும் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என DBKL தெரிவித்துள்ளது.



