
கோலாலம்பூர், அக்டோபர் 21 – வரி மதிப்பீட்டுக் கட்டணத்தை 140 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து குறைப்பதற்காகப் பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 30 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் அரசுப் பணியாளர் ஒருவர் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
50 வயதைக் கடந்த அந்த ஆண் அதிகாரி, அக்டோபர் 21ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் கோலாலம்பூர் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
2025 முதல் 2026ஆம் ஆண்டு வரை இந்தச் செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி வரை அவரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.



