
அலோர் காஜா, ஜூன்-14 – மலாக்கா, அலோர் காஜாவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில் 14 வயது பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லூபோக் சீனா நோக்கிச் செல்லும் ஜாலான் சுங்கை சிப்புட் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Muhammad Muiszudin Mohamad Yusof என்ற அந்த மாணவர், அதே திசையில் சென்றுகொண்டிருந்த Perodua Viva காரின் பின்புறத்தில் மோதியுள்ளார்.
மோதிய வேகத்தில் எதிர்த்திசை பாதையில் தூக்கி வீசப்பட்ட அவர் மீது, எதிரே வந்த டாங்கி லாரி மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.
இதில் காரோட்டுநரும், லாரி ஓட்டுநரும் எவ்வித காயமுமின்றி தப்பினர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த விபத்து தொடர்பான dashcam காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.



