Latestமலேசியா

அலோர் காஜாவில் காரில் இரு சடலங்கள் மீட்பு; திடீர் மரணமாக போலீஸ் அறிவிப்பு

அலோர் காஜா, செப்டம்பர்-20,மலாக்கா, டுரியான் துங்கால், தாமான் இனாங் சாரியில் காரொன்றில் இருந்து ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

​அதிகாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாகக் கிடந்த இருவரும் உள்ளூர்வாசிகள் எனவும், 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் நம்பப்படுகிறது.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

​சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல்களுக்கான தடயங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!