Latestமலேசியா

ஆபாச வீடியோ, படங்கள் வைத்திருந்த 14 வயது மாணவனுக்கு 50 மணி நேரச் சமூக சேவை தண்டனை

பத்து பஹாட், செப்டம்பர்-3,ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தனது கைப்பேசியில் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 14 வயது மாணவனுக்கு, 50 மணி நேரச் சமூக சேவைத் தண்டனையை வழங்கியுள்ளது ஜோகூர் பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றம்…

​இந்தச் சமூக சேவையை அடுத்த 4 மாதங்களுக்குள் அம்மாணவன் நிறைவு செய்ய வேண்டும்.

குற்றவியல் சட்டத்தின் கீழ், ஆபாசப் பொருட்களை வைத்துள்ளதாக அம்மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த மார்ச் 1-ஆம் தேதி, பத்து பஹாட் போலீஸ் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

​சமூக சேவையுடன் சேர்த்து, அம்மாணவனுக்கு 1,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் 3 ஆண்டுகள் நன்னடத்தைப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அம்மாணவன் வெளியில் செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், 2 மாதங்களுக்கு ஒருமுறை சமூக நலத்துறையில் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!