Latest

ஆப்பிரிக்காவில் பயங்கரம்: மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி

கம்பாலா, ஆகஸ்ட்-2 – வடமேற்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் வீசிய பலத்த புயல் மற்றும் மோசமான வானிலைக்கு இடையே, மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

அவர்களில் நால்வர் குழந்தைகள், இருவர் பெற்றோர்கள் ஆவர்.

 

மோசமான வானிலையின் போது வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தபோதே இந்தத் திடீர் மின்னல் தாக்குதல் சம்பவத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, உள்ளூர் அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

 

மேலும், மோசமான வானிலை நிலவும் காலங்களில் பொது மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்

டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!