Latestமலேசியா

ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல்

ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல்

கோலாலாம்பூர், பிப்ரவரி-16,

அனுமதியில்லாத இந்து கோவில்களை சேதப்படுத்தப்படுவது மற்றும் இந்திய சமூகத்தினரை அச்சுறுத்துவது போன்ற செயல்களுக்கு, மனித உரிமை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லத்தீஃபா கோயா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

_“இது இஸ்லாமிய போதனைக்கு எதிரான செயல். மற்ற மதங்களின் வழிபாட்டு இடங்களை அழிப்பதையும் மதத்தை அவமதிப்பதையும் இஸ்லாம் தடைச் செய்கிறது”_ என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையருமான அவர், தனது X தளப் பதிவில் குறிப்பிட்டார்.

_“அதிகாரமும் அரசியல் பலமும் உள்ள பெரும்பான்மையினர், பலவீனமான சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு நடப்பது கோழைத்தனம்”_

அவ்வகையில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய இந்தியர்களும் இந்துக்களுமே இதில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதாக அவர் சொன்னார்.

மற்றவர் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட ஆலயங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், லத்தீப்ஃபா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, சிலாங்கூர் ராவாங்கில் ஒரு சில தனிநபர்களால் உச்சிமலை முனீஸ்ர்வரர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு; அதற்குப் பொறுப்பான 4 பேர் கைதாகினர்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான கோஷங்களை தூண்டி, உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனம் திருப்புவதாகவும் சில அரசியல் தலைவர்களை அவர் சாடினார்.

_“நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்; அப்படியிருக்க ஏழை இந்தியர், ஏழை மலாய்க்காரர் என இனம் – மதங்களின் பெயரில் நம்மை பிரிக்க விடக்கூடாது”_ என லத்தீப்ஃபா வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!