பாரீஸ், ஜூலை-4, இந்தியாவின் 10 பெரு நகரங்களில் பதிவாகும் மரணங்களில் 7 விழுக்காட்டுக்கும் மேல் காற்றுத் தூய்மைக்கேட்டுடன் தொடர்புடையவை என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புது டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, பூனே, சிம்லா, வாரணாசி ஆகியவையே அந்த 10 பெரு நகரங்களாகும்.
உலகளவில் மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டு பிரச்னையில் சிக்கியுள்ள நகரங்களாகவும் அவை விளங்குவதாக, The Lancet Planetary Health எனும் ஆய்வு தெரிவிக்கிறது.
புற்றுநோயை உண்டாக்கக் கூடிய PM2.5 நுண்துகள்களின் அளவு, அங்கு உலகச் சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்த பாதுகாப்பு வரம்புகளை மீறியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக மோசமாக புதுடெல்லி விளங்குகிறது; அங்கு ஆண்டுக்கு 12,000 மரணங்கள் காற்றுத்துமைக்கேட்டால் பதிவுச் செய்யப்படுகின்றன; மொத்த மரணங்களில் அது 11.5 விழுக்காடாகும்.
மக்களின் நுரையீரல் பாதிக்கப்படும் அளவுக்கு அப்பிரச்னை முற்றிப் போயிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆண்டுதோறும் ஏராளமான உயிர்கள் பறிபோவதைத் தடுக்க மேலும் ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக காற்றித் தரக் குறியீடு இந்தியாவில் மேலும் கடுமையாக்கப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.