Latestமலேசியா

இன்று ​முதல் RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலைகள் சரிவு

புத்ராஜெயா, ஜூன்-4-நாட்டில் இன்று முதல் RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறைகின்றன.

​ஜூன் 4 முதல் 10-ஆம் தேதி வரையிலான வாராந்திர எரிபொருள் விலை மாற்றங்களை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தானியங்கி விலை நிர்ணய முறையின் கீழ் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

​புதிய விலை நிலவரப்படி RON97 லிட்டருக்கு 30 காசுகள் குறைந்து 4 ரிங்கிட் 35 காசுகளாகவும்,
​மானியமில்லா RON95 லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 3 ரிங்கிட் 72 காசுகளாகவும் விற்கப்படும்.

​அதே சமயம், டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 4 ரிங்கிட் 67 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​இவ்வேளையில், பொது மக்களுக்கான BUDI95 மானிய விலையிலான RON95 பெட்ரோல் தொடர்ந்து 1 ரிங்கிட் 99 காசுகளாகவே நீடிக்கும்.

அதே வேளையில், உலகச் சந்தையில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, பொது மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!