
ஜோகூர் பாரு, ஏப் 24 – ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறிய பிறகு, எரிபொருளை ஏற்றிச் செல்லும் மலேசியாவிற்குச் சொந்தமான இரண்டு டேங்கர் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஈரானுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஈரானிய அரசாங்கம், குறிப்பாக அதன் அதிபரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், கப்பல்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஒரு கப்பல் ஏற்கனவே ஜோகூர், பெங்கராங்கிற்கு வந்துவிட்டது, மற்றொன்று மலேசிய கடல் எல்லைக்குள் நுழைகிறது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையிலிருந்து ஏற்கனவே வெளியேறிய இரண்டு கப்பல்கள் இன்னும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன என அன்வார் தெரிவித்தார்.
‘
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், உண்மையில் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என Bandar Permas Jaya பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையில் மேலும் ஒரு மலேசியக் கப்பல் துறைமுகத்தில் இருப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கு ஒரு கப்பல் சிக்கியுள்ளது, இதனால் தற்போதைக்கு அது புறப்பட முடியவில்லை அவர் குறிப்பிட்டார்.



