Latestமலேசியா

இரு வெளிநாட்டு பெண்களை மறைத்து வைத்திருந்தனர் -இருவருக்கு தலா 3,000 ரிங்கிட் அபராதம்

பத்து பஹாட் , ஏப் 22 – புலம் பெயர்ந்த இருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்தது , மற்றும் அவர்களின் கடப்பிதழ்களை தங்களிடம் வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட ஒரு முதியவருக்கும், தனித்து வாழும் தாய் ஒருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

71 வயதான கெர் பெங் ஹோ ( Ker Peng Hoe,) மற்றும் 43 வயதான ஹர்தாதி அகோஸ்டோனி (Hartati Agostoni,) ஆகியோர், நீதிபதி அருண் நோவல் தாஸ் முன்னிலையில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 340-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

அவ்விருவரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தாமான் புளோரா உத்தாமாவில் உள்ள ஒரு கடைவீட்டில் இரண்டு இந்தோனேசியப் பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஏப்ரல் 20ஆம்தேதியன்று மாலை மணி 3.30 முதல் மாலை மணி 4.30 வரை பத்து பஹாட் மாவட்ட காவல் தலைமையகத்திலும் மற்றும் தாமான் புளோராவில் ஒரு அறையிலும் கடப்பிதழ்களை மறைத்து வைத்ததாக அவர்கள் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

அவ்விருவருக்கும் முதல் குற்றத்திற்கு 2,000 ரிங்கிட்டும் இரண்டாவது குற்றத்திற்கு மேலும் ஆயிரம் ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!