Latestமலேசியா

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் மலேசியாவுக்கு 32.2 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

கோலாலம்பூர், அக்டோபர் 28 –இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், மலேசியாவுக்கு 32.2 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.4 விழுக்காடு அதிகமாகும் எனச் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை 323 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 விழுக்காடு பங்களிப்பையும் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்த, 2026/2027 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு சுற்றுலா விளம்பர நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு 935 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2027 பட்ஜெட் தொடர்பான விவாதத்திற்கு மக்களவையில் பதிலளித்தபோது அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!