Latestமலேசியா

ஈப்போ குவாரியில் திடீர் பாறைச் சரிவு; மண்வாரி இயந்திர ஓட்டுநர் படுகாயம்

ஈப்போ, மே-26-ஈப்போவில் உள்ள குவாரி சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பாறைச் சரிவில், மண்வாரி இயந்திரத்தின் மீது ரீராட்சதக் கற்பாறை விழுந்ததில், அதன் உள்ளே சிக்கித் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

புக்கிட் தெம்பாகாவில் உள்ள குவாரியில் நேற்று பிற்பகலில் இந்த எதிர்பாரா விபத்து நிகழ்ந்துள்ளது.

29 வயது Ahmad Zaidi Dali, 29 மண்வாரி இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, குவாரியின் மேல்பகுதியிலிருந்து திடீரென சரிந்து விழுந்த பிரம்மாண்ட பாறைத் துண்டுகள் அந்த இயந்திரத்தின் மீது விழுந்தன.

இதில் இயந்திரத்தின் இரும்புப் பாகங்களுக்கு இடையே உடல் நசுங்கி, நகர முடியாமல் அந்தத் தொழிலாளி பரிதாபமாகத் தவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பிரத்யேக வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரை மீட்டனர்.

இடுப்பு மற்றும் கால்களில் கடுமையான எலும்பு முறிவுகளுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!