
அலோர் ஸ்டார், அக்டோபர்-14,கெடா, அலோர் ஸ்டாரில் நடைபெற்ற Tokong Sayur கோவில் ஊர்வலத்தின்போது, உயர் மின்னழுத்த மின்கம்பியில் கொடி உரசியதால் 3 பதின்ம வயதினர் காயமடைந்தனர்.
Mergong-கில் நேற்றிரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்தின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
இலேசான மழையுடன் பலத்த காற்று வீசியதால், பதின்ம வயதினர் ஒருவரின் கையிலிருந்த கொடி மின்கம்பியில் உரசியதாக நம்பப்படுகிறது.
இதனால் மின்சாரம் தாக்கியதில் மூவரும் சாலையில் விழுந்தனர்.
16 மற்றும் 17 வயதுடைய மூவரும் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களின் உடல்நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என Mergong, Tokong Sayur சங்கச் செயலாளர் தெரிவித்தார்.
இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் உதவும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.



