Latestமலேசியா

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: மலேசியாவில் RTM மற்றும் Unifi TV அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள்

புத்ராஜெயா, மே-6-மலேசிய கால்பந்து இரசிகர்களுக்கு ஓர் உற்சாகமான செய்தி.

அடுத்த மாத உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை RTM மற்றும் Unifi TV பெற்றுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

அனைத்து 104 ஆட்டங்களும் நேரலையாக Unifi TV-யிலும், பெரும்பாலான போட்டிகள் நேரலையாகவோ அல்லது தாமதமாகவோ RTM-மின் MyTV மற்றும் RTM Klik ஒளிபரப்பப்படும்.

இதற்காக அரசாங்கம் 24 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஒளிபரப்பு மிகத் தரமான முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் என்று ஃபாஹ்மி கூறினார்.

மேலும், நாடு முழுவதும் சில முக்கிய இடங்களில் பொதுத் திரை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் அனைத்து மலேசியர்களும் இந்த பிரம்மாண்ட கால்பந்து திருவிழாவை எவ்வித தடையுமின்றி இரசிக்க முடியும் என்றார் அவர்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கால்பந்து திருவிழா ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி ஜூலை 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!