Latestஉலகம்

உலகளவில் சிறிது நேரம் மாயமாகி ஆப்பிள் ஸ்டோருக்குத் திரும்பிய டெலிகிராம்

இஸ்தான்புல், ஆகஸ்ட்.04-டெலிகிராம் செயலி உலகளவில் சிறிது நேரம் Apple App Storeரில் இருந்து மாயமாகி பின்னர் திரும்பியது. அத்தகவலை அந்நிறுவனம் தங்களிடம் உறுதிப்படுத்தியதாக Anadolu Ajansi செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இடையூறு சிறிது நேரம் மட்டுமே நீடித்ததாகவும் டெலிகிராம் பின்னர் மீண்டும் App Storeரில் சேர்க்கப்பட்டு விட்டதாகவும் Apple நிறுவனம் விளக்கியது. அதன் பிரத்தியேக App Storeரில் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டாலும், 0200GMT நிலவரப்படி, அச்செயலி இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இடையூறின் போது, அச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இருப்பினும், தங்கள் சாதனங்களில் ஏற்கனவே அந்த மென்பொருளைக் கொண்டிருந்தவர்கள், அச்செயலி வழக்கம் போல் தொடர்ந்து இயங்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறால் டெலிகிராம் தற்காலிகமாக மாயமானதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனமும் டெலிகிராம் நிறுவனரும் அப்பிரச்சினை குறித்து இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன் 2018-ல் தனது App Storeரில் இருந்து டெலிகிராம் இந்தச் செயலியை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, Google Play Storeரில் டெலிகிராம் தொடர்ந்து கிடைக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!