Latestமலேசியா

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல் Vinod Gangங்கின் உறுப்பினர்கள் என 11 பேர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஜூலை-24-Vinod Gang எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பதினொரு பேர், Sepang செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

2024 ஏப்ரல் முதல் 2026 ஜூன் 27 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் Bandar Rimbayu மற்றும் Telok Panglima Garang ஆகிய பகுதிகளில் இவர்கள் Vinod Gang கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாக அந்த 11 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

முஹமட் வினோத் சக்திவேல் (30), எம். புவனேஸ்வரன் (34), லாரன்ஸ் ஆல்ஃபிரட் (34), ஜி. சங்கீதன் (31), எம். நவீந்திரன் (29), எஸ். ஸ்ரீ தரன் (27), எம். சுரேந்தர் (27), என். ஏ. என். விக்னேஸ்வரன் (27), ஜே. எம். கிஷன் (24), ஆர். ஷெர்வின் குமார் (23) மற்றும் டி. சார்வின் (21) ஆகியோரே அந்த 11 பேர் ஆவர்.

அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அடுத்தக் கட்ட விசாரணைக்காக செப்டம்பர் 14-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Bukit Aman CID மற்றும் சிலாங்கூர் CID பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட Op Rapido நடவடிக்கையின் மூலம் அவர்கள் கடந்த ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அக்குழு 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும், கும்பலாகக் கொள்ளை, கொலை முயற்சி, ஆயுதமேந்திய கலவரம், ஆயுதங்களால் காயப்படுத்துதல் மற்றும் சேதம் விளைவித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் Bukit Aman CID இயக்குனர் டத்தோ எம். குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Vinod Gang கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் இன்னும் பிடிபடாத மேலும் ஐந்து நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!