Latestமலேசியா

கடத்தல் வழக்கில் தீவிர விசாரணை: மலேசிய விமானி போதைப்பொருள் விவகாரத்தில் புதிய சந்தேக நபர்கள் கைது – உள்துறை அமைச்சர்

பாசீர் பூத்தே, செப்டம்பர்-4,45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தில், அரச மலேசியப் போலீஸ் படை மேலும் பல புதிய சந்தேக நபர்களைக் கைதுச் செய்துள்ளது.

​உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மலேசியப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் வேகமான நடவடிக்கையால் இந்த புதியக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தோனேசிய அதிகாரிகளுடன் PDRM தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

​கடந்த ஜூலை இறுதியில், கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தாவுக்குச் சென்ற 39 வயதான அந்த வணிக விமானியிடமிருந்து 70,000-க்கும் அதிகமான எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகளும் மெத்தம்பெட்டமைனும் (Methamphetamine) கைப்பற்றப்பட்டன.

​இந்தப் போதைப்பொருட்களை ஜகார்த்தாவுக்குக் கடத்த அவ்விமானிக்கு 50,000 ரிங்கிட் பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலையும் கண்டறியத் தீவிர விசாரணைத் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!