Latestமலேசியா

கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவருக்கு சிறைத் தண்டனை 14 ஆண்டாக அதிகரிப்பு

புத்ரா ஜெயா, மே-4-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளிய வழக்கில், வியாபாரி ரோஸ்மைனி அப்துல் ராவ்பிற்கு ( Rosmaini Abdul Raof ) இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டத்தோ அஸ்மான் அப்துல்லா ( Azman Abdullah) தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவனுக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அசல் 10 ஆண்டு தண்டனை குடும்ப வன்முறை வழக்கிற்கு போதாது என்பதால் கூடுதல் தண்டனைக்கு மேல் முறையீடு நீதிமன்றம் ஒருமனதாக அதிகரித்தது.

நீதிபதிகள் டத்தோ நோரின் படாருடின் ( Noorin Badaruddin) மற்றும் டத்தோ முகமட் ரட்ஷி அப்துல் ஹமிட் ( Mohd Radzi Abdul Hamid) ஆகியோர் இந்த வழக்கை கண்காணித்த இதர நீதிபதிகளாவர்.

இந்தத் தாக்குதல் பாதிக்கப்பட்டவரான 48 வயதான ஜாஹிதா நோர்டின் @ சில்வெஸ்டரின் ( Jahidah Nordin@ Sylvester)வாழ்க்கையைச் சிதைத்துவிட்டது என்றும், அவர் தற்போது சுயநினைவற்ற நிலையில் இருப்பதாக நீதிபதி Noorin Badarudin தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஜாஹிதா கோமாவில் இருந்தபோது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த, தற்போது நான்கு வயதான அவரது மகன், வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்வதோடு , மாற்றுத்திறனாளி எனச் சான்றளிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 43 வயதான ரோஸ்மைனி, ஜாஹிதாவின் தங்கை பசாரியா மூலம் அவருக்கு 25,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!