Latestமலேசியா

கழிவறைத் தூய்மைப் பிரச்னை: செராஸில் சக நாட்டவரை கத்தியால் வெட்டிய வங்காளதேசி கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட்-10-கழிப்பறை தூய்மை குறித்த பிரச்னை, இறுதியில் வெட்டுக்குத்தில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் கோலாலம்பூர், தாமான் செராஸ் பாருவில் நடந்துள்ளது.

​தங்கியிருந்த வாடகை வீட்டில் கழிப்பறையைத் தூய்மையாக வைக்குமாறு அடிக்கடி அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த வங்காளதேச ஆடவர், தன்னுடன் தங்கியிருந்த சக நாட்டவரையே கத்தியால் வெட்டியுள்ளார்.

​உள்ளூர் உணவகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 36 வயது நபருக்குக் பலத்த காயம் ஏற்பட்டது.அவர் உடனடியாக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

​விசாரணையில், இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வந்தது தெரியவந்துள்ளது.30 வயது சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!