Latestமலேசியா

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

ஏதன்ஸ், ஆகஸ்ட்-3-கிரீஸ் நாட்டுத் தலைநகர் ஏதன்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின.

இதில் விழுந்து நொறுங்கிய ஒரு ஹெலிகாப்டரில் இருந்த இருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த உயரத்தில் பறந்தபோது, ஒரு ஹெலிகாப்டரின் சுழல் இறக்கை மற்றொரு ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் மோதியதில், அது தீப்பற்றி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

மற்றொரு ஹெலிகாப்டர் தண்ணீரை ஊற்றிவிட்டுப் பறந்து சென்ற நிலையில், அதில் இருந்த குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.

கிரீஸில் இந்த மோசமான காட்டுத்தீ காரணமாக இதுவரை 10,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.

தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!