Latestமலேசியா

கிளந்தானில் பாதுகாக்கப்பட்ட 8 கிளிகள் பறிமுதல்- இருவர் கைது

தும்பாட், ஜூலை-7-கிளந்தான், Bandar Tumpat சாலையில் கடத்தப்பட்ட எட்டு கிளிகளை ஏற்றிச் சென்ற இரு நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். 28 மற்றும் 31 வயதுடைய அந்த உள்ளூர் நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த Proton Waja வாகனத்தைச் சோதனைக்காக நிறுத்துமாறு அதன் ஓட்டுநருக்கு உத்தரவிட்டனர்.

வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பின் இருக்கையிலும் பகுதியிலும் வைக்கப்பட்டிருந்த, எட்டு கிளிகள் அடங்கிய நான்கு கூண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை நான்கு லட்சம் ரிங்கிட் மதிப்புடையவை.

அதே வேளை, பாதுகாக்கப்பட்ட அந்தப் பறவைகளை வைத்திருப்பதற்கும் கொண்டுச் செல்வதற்கும் தேவையான உரிய ஆவணங்கள் அல்லது அனுமதிகள் எதையும் சந்தேக நபர்கள் கொண்டிருக்கவில்லை என்பது தெரிய வந்ததாக மூத்த உதவி கமிஷனர் Ahmad Radzi Hussain தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் ஒருவர் Kampung Kelaboran-ல் பறவைகளைச் சேகரித்ததை ஒப்புக் கொண்டதோடு, கிளிகள் இருந்த நான்கு கூண்டுகளை ஒப்படைக்க தமக்கு 400 ரிங்கிட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

ஜோகூருக்குக் கொண்டு செல்லப்படும் முன், அந்தப் பறவைகள் கோத்தா பாரு பேருந்து முனையத்திற்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுவதாகவும் Ahmad Radzi சொன்னார்.

இவ்வேளையில் மேல் நடவடிக்கைக்காக சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் கிளந்தான் வன விலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!