
கிள்ளானில் தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற 57 வயது ஆடவரைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாமான் ஸ்ரீ ஆண்டாலாஸில் தான் தங்கியிருந்த விடுதி ஒன்றில், நகைக் கடைக்கு விநியோகம் செய்யும் 28 வயது ஊழியரைச் சந்தித்த சந்தேக நபர், பரிசோதனைக்காக வாங்கிய 70 தங்கக் கட்டிகளுடன் திடீரென பின்வாசல் வழியாகத் தப்பிச் சென்றார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் பேரில் தீவிர புலனாய்வு மேற்கொண்ட தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் , கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேக நபரைக் கைதுச் செய்தது.
அவரிடமிருந்து சுமார் 150,000 ரிங்கிட் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகளும் முழுமையாக மீட்கப்பட்டன.
7 பழைய குற்றப் பின்னணிகளைக் கொண்ட அந்நபர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.



