Latestமலேசியா

கிள்ளான் துறைமுக ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் இடிக்கப்படாது; நில அலுவலக நோட்டீஸ் குறித்து டாக்டர் குணராஜ் விளக்கம்

போர்ட் கிள்ளான், அக்டோபர்-6 – போர்ட் கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு நில அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தில், பக்தர்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

​அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் வழங்கிய அந்த நோட்டீஸ் குறித்து ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

​நோர்த்போர்ட் மற்றும் வெஸ்ட்போர்ட்ஸை இணைக்கும் ‘கிழக்குக் கரை இரயில் இணைப்பு’ (ECRL) திட்டத்துடன் தொடர்புடைய விவகாரம் இது என்றும், ஆலயத்தின் மூலஸ்தானமோ அல்லது முக்கியக் கட்டட அமைப்புகளோ இதனால் பாதிக்கப்படவோ அல்லது இடிக்கப்படவோ மாட்டாது என்று அவர் உறுதிப்படுத்தினார்.

தவிர, இ​ரயில் பாதைக்கான தூண்கள் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப வரைபடங்கள் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை; போக்குவரத்து அமைச்சு மற்றும் இரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

​இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட அதிகாரியை நேரில் சந்திக்கவுள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகள் அவசியமாக இருந்தாலும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட வேண்டும் என்றும் குணராஜ் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!