
கோலாலம்பூர், ஜன 28 – கிள்ளான் , Taman Perindustrian Kapar indah வில் உள்ள ரசாயன மறுசுழற்சி தொழிற்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிப்பிற்கு அலட்சியம் மற்றும் குற்றவியல் கூறுகள் இல்லை என்று வட கிள்ளான் போலீஸ் தலைவர் S. விஜய ராவ் தெரிவித்தார். இந்த சம்பவம் ரசாயன எதிர்வினையால் ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலை உரிமையாளர், தொழிலாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக Taman Eng Ann காலை சந்தைக்கு வருகை புரிந்தபோது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் துறை மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த செவ்வாய்கிழமை அந்த வெடி விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு அருயேயுள்ள இடத்தில் இருந்த 32 பேர் காயமடைந்ததனர். அவர்கள் அனைவரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். அந்த தொழிற்சாலையின் ரசாயனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட அமிலம் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஆய்வுக் குழு தெரிவித்தது. இதனிடையே சுங்கை பூலோ தொழிற்பேட்டையில் உள்ள திரவமய பெட்ரோலிய எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்து குறித்து கருத்துரைத்த விஜயராவ் , பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் காயங்களால் இறந்ததை உறுதிப்படுத்தினார். ஏற்கனவே அந்த விபத்தில் காயம் அடைந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் இறந்தார்.