
கோலாலம்பூர், ஜூன் 24- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குற்றஞ்சாட்டும்
அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உட்டபட்டதாகும்.
இந்தச் சட்ட நடவடிக்கை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 145(3)-ன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் அல்லது குற்றவியல் சட்டம் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டிய விவகாரங்கள், அந்தந்த வழக்கின் தகுதிகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் ஆய்வுக்கு உட்பட்டவை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இருப்பினும், 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் [சட்டம் 333] கீழ் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுபவர்கள், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கோ இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வகை செய்யும் உத்தேச சட்டத் திருத்த முன்மொழிவை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதே வேளையில் பிற சட்டரீதியான வழிமுறைகளுக்கு மாற்றாக இந்த முன்மொழிவு அமையவில்லை என்றும் அந்தோனி லோக் நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.



