
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.
செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த இரு அதிகாரிகளும், சந்தேக நபரால் கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.
நேற்று நண்பகலில்ஈஜோக், கம்போங் சுங்கை ஜெர்னி (Kampung Sungai Jernih) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, கட்டுப்பாட்டை இழந்த அந்த போதைப்பித்தர், திடீரென பாய்ந்து அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்.
காயமடைந்த அதிகாரிகள் உடனடியாக அவசரச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
இருவரையும் தாக்கி விட்டு சந்தேக நபர் தப்பியோடிய நிலையில், அவரைக் கைதுச் செய்ய Op Tutup என்ற சோதனை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.



