
பண்டார் ஸ்ரீ பெகாவான், ஆகஸ்ட்-9 – புரூணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா, தனது மருமகளான பெங்கிரான் ராபியாதுல் அதாவிய்யா பெங்கிரான் ஹாஜி போல்கியாவின் (Pengiran Raabi’atul ‘Adawiyyah Pengiran Haji Bolkiah) அரச பட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளார்.
அரண்மனை தலைமைப் பொறுப்பதிகாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, அவரது Yang Amat Mulia Pengiran Anak Isteri என்ற அரச பட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரச குடும்பத்து உறுப்பினருக்குப் பொருந்தாத வகையில் நடந்துகொண்டதாலும் சுல்தான், அரசியார் மற்றும் அரச குடும்பத்தினருக்கு மரியாதைக் குறைவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Pengiran Raabi’atul ‘Adawiyyah , புருணை சுல்தானின் இளைய மகன்களில் ஒருவரான இளவரசர் அப்துல் மாலிக்கை 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார்.



