Latestமலேசியா

ஜோகூர் பாரு ஹோட்டலுக்கு வெளியே சண்டை: 3 பேர் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-9,ஜோகூர் பாருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே நிகழ்ந்த பயங்கர மோதல் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, 3 ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாகக் நம்பப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்தின் போது அவர்களில் சிலர் மது அருந்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.

​கைதுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பின்னணி சோதனையில், இந்த மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தம் 25 பழையக் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

​இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!