
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9,கோலாலம்பூர் – சிரம்பான் இடையேயான PLUS நெடுஞ்சாலையில் சொகுசு காரான ஃபெராரி மற்றும் பெரோடுவா அரூஸ் காரின் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரை நிறுத்திவிட்டு இரு ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் வீதியிலேயே ஒருவரைையொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
மாறி மாறி முகத்தில் குத்திக் கொண்ட இருவரையும் பொது மக்கள் தலையிட்டு விலக்கி விட முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏதோ ஒரு தவறான புரிதலால் அவ்விரு ஓட்டுநர்களும் அடித்துக் கொண்டதாக நம்பப்பட்டாலும், உண்மைக் காரணம் தெரியவரவில்லை.
இச்சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு பின், போலீஸ் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



