Latestமலேசியா

குளுவாங்கில் LED திரைகள் ஊடுருவப்பட்டன: ஆபாசக் காணொளிகள் ஒளிபரப்பு

குளுவாங், அக்-30-ஜோகூர், குளுவாங்கில் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த LED திரைகள் ஊடுருவப்பட்டதை குளுவாங் நகராண்மைக் கழகம் (MPK) உறுதிப்படுத்தியுள்ளது. அதனால், நேற்று அத்திரைகளில் ஆபாசப் படங்களும் காணொளிகளும் ஒளிபரப்பாகின.

அச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்றும், அதன் மூல காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்துடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் MPK தெரிவித்துள்ளது. மேலும், பாதிப்புகளைச் சரிசெய்து, திரை அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அது கூறியது. அச்சம்பவத்திற்கு MPK பொதுமக்களிடம் மண்னிப்பு கேட்டுக் கொண்டது.

இவ்வேளையில், அச்சம்பவம் குறித்த அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாக ஜோகூர் வீடமைப்பு மற்றும் ஊராட்சி நிர்வாகக் குழுத் தலைவர் Datuk Mohd Jafni Md Shukor தெரிவித்தார். அச்சம்பவத்தைத் தொடர்ந்து, MPK உடனடியாக அனைத்து LED திரைகளையும் அணைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Dataran Tasik Kluang, Taman Intan மற்றும் Kahang செல்லும் வழியிலுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆபாசக் காட்சிகள் திரையிடப்பட்ட சம்பவம் முன்னதாக சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் பரவலாகப் பகிரப்பட்டிருந்தன. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!