
குவாலா சிலாங்கூர், ஏப்ரல்-19-கல்வி யுத்தம் 2026 நேற்று, ஏப்ரல் 18-ஆம் தேதி, குவாலா சிலாங்கூர், பண்டார் ஸ்ரீ கோல்ஃபீல்ட்ஸில் உள்ள வெஸ்லி மெதடிஸ்ட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ முருகன் மையம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, “உள்ளார்ந்த போரில் வெற்றி; எதிர்காலத்தை வலுப்படுத்தல்” என்ற கருப்பொருளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிகாரப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
குவாலா சிலாங்கூரில் ஸ்ரீ முருகன் நிலையம் இல்லாத நிலையிலும், உள்ளூர் மக்களின் அமோக வரவேற்பால் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.
குவாலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட்டின் பிரதிநிதியாக, அவரின் அரசியல் செயலாளர் Hj Mohammad Faisal Ismail சிறப்பு வருகைபுரிந்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
SMC-யில் படித்து மருத்துவர்களாக உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பில் ‘ஸ்ரீ முருகன் சுகாதார பராமரிப்பு அத்தியாயம்’ என்ற புதிய முன்னெடுப்பையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய அவர், கல்வி வழியே சமூக முன்னேற்றம் அடையும் என வலியுறுத்தினார்.
இவ்வேளையில், ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் சுரேன் கந்தா, இந்த முயற்சி மாணவர்களை ஊக்குவிப்பதுடன், சாதனையாளர்களை பாராட்டி, கல்வி மற்றும் குடும்ப ஆதரவு மூலம் வறுமைச் சுற்றத்தை உடைப்பதே நோக்கம் என தெரிவித்தார்.
குவாலா சிலாங்கூரில் 20 ஆண்டுகளுக்கு முன் SMC-யில் படித்து இப்போது இராணுவத்தில் உயரியப் பதவியில் இருக்கும் மேஜர் ஜெய்சங்கர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அதே சமயம், குவாலா சிலாங்கூர் வட்டாரத்தின் துடிப்புமிக்க இளைஞர் சுகுமாறன் ஆறுமுகம், இந்தக் கல்வி யுத்தம் அங்கு நடைபெற மிகவும் உறுதுணையாக இருந்ததன் அடிப்படையில், ஸ்ரீ முருகான் நிலையத்தின் ‘சாணக்கியா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கல்விக் கருத்தரங்கு மட்டுமல்லாமல், சமூகச் சேவை அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெற்றன.
JKM எனு சமூக நலத் துறை கூடாரம் அமைத்து மக்களுக்கு உரிய சேவைகளையும் விளக்கங்களையும் வழங்கியது.
TVET தொழில்பயிற்சி கூடாரம், SPM தேர்வுக்குப் பிந்தைய வழிகாட்டி கூடாரம் ஆகியவற்றோடு மருத்துவ முகாமும் நடைபெற்றது.
SMC மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என ஆயிரதேதிற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.



