
கோலாலம்பூர், செப்டம்பர்-13-கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலாக ஷரியா சட்டத்தை வைப்பது மலேசியாவின் சட்டக் கட்டமைப்பை சீர்குலைக்கும் என G25 அமைப்பமைப்பு எச்சரித்துள்ளது.
’காலனித்துவ கால தடைச் சட்டங்களை’ நீக்க வேண்டும் என்ற பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்துக்கு பதிலளித்த G25, 1956-ஆம் ஆண்டு சிவில் சட்டம் மற்றும் சட்டம் 355 ஆகியவை நாட்டின் சட்ட அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகள் என சுட்டிக் காட்டியது.
அரசியலமைப்பின் மேலாதிக்கத்தைக் குறைப்பது நாட்டின் முதலீட்டாளர் நம்பிக்கையைப் பாதிப்பதோடு, சட்ட அமைப்பையும் சீர்குலைக்கும் என்று எச்சரித்த அவ்வமைப்பு, நாட்டுத் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் அரசியலமைப்பின் மாண்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
மலேசியாவின் இரட்டைச் சட்ட முறையையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்கு கூட்டரட்சு அரசியலமைப்பே முதன்மையானது என G25 மீண்டும் வலியுறுத்தியது.



