
கோலாலம்பூர், அக்டோபர்-2,கெத்தும் போதை நீர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 8 போலீஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
தாமான் கெராமாட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைதாகியதை புக்கிட் அமான் போலீஸ் உறுதிப்படுத்தியது.
இரவு 8.45 மணியளவில் ஜாலான் AU1, தாமான் கெராமாட்டில் JIPS புலனாய்வு மற்றும் நடவடிக்கைப் பிரிவும், அம்பாங் ஜெயா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டன.
கைதுச் செய்யப்பட்ட போலீஸாரில் 7 பேர் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்கள்; மற்றொருவர் பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
அவர்களுடன் பொது மக்களில் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டார்.
அனைவரும் தற்போது உலு கிள்ளான் போலீஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



