
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway
SPK டாமான்சாரா வீட்டில் 52 வயது மாது, உடம்பில் 89 வெட்டுக் குத்துக் காயங்களுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது 54 வயது கணவர், மனைவியை பலமுறை குத்திய பின் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுவதாக போலீஸார் கூறினர்.
கணவருக்கும் 10 காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இது கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
இச்சம்பவம் கொலை-தற்கொலை எனக் வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை நடைபெறுகிறது.
மரணமடைந்தவரின் உடல் குடும்பத்தினரால் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.



