
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின்
அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி தரையில் வீசியது.
காயமடைந்த ஆடவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, கை முறிந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இச்சம்பவம், திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
யானைப் பாகன் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடக்கிறது.
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, விலங்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களை தூண்டியுள்ளது



