கோலாலம்பூர், ஜூலை-5 – சுகாதாரப் பணியாளர்கள் வெளிநாட்டில் வேலைக்குச் செல்வது குறித்து சுகாதார அமைச்சு கவலைத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மட்டும் 2,445 தாதியர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்ததாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃளி அஹ்மட் (Dzulkifli Ahmad) கூறினார்.
அவர்களில் 36% பேர் அரசுத் துறைப் பணியாளர்கள் ஆவர்.
இந்த பிரச்சினை தனியார் துறையிலும் இருப்பதாக அமைச்சர் சொன்னார்.
நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தாதியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை 2030-ஆம் ஆண்டு வாக்கில் 60% விழுக்காட்டை எட்டக்கூடுமென Dr சுல்கிஃப்ளி ஏற்கனவே கூறியிருந்தார்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம், நாட்டின் தாதியர் சேவைக்கான தேவையை அதிகரிக்க முடியுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தாதிமைத் துறையில் இருக்கும் 6,787 காலியிடங்களை நிரப்பும் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக 20 மருத்துவ நிபுணர்களும் வேலையில் இருந்து விலகியிருக்கிறனர்.
இந்த எண்ணிக்கை 2013 மற்றும் 2023 க்கு இடையில் ராஜினாமா செய்த 1,991 மருத்துவ நிபுணர்களில் 1% ஆகும்.
இங்கு வழங்கப்படுவதை விட வெளிநாடுகளில் கை நிறைய சம்பளம் கிடைப்பதே அவர்களின் அம்முடிவுக்கு முக்கியக் காரணமென அமைச்சர் சொன்னார்.