Latestஉலகம்

கொலை நடந்த இடத்தைப் பார்க்க குவியும் மக்கள்: லோஹகாட் கோட்டையில் 25% அதிகரித்த பார்வையாளர்கள்

மகாராஷ்டிரா, ஜூன்-30- மகாராஷ்டிராவின் லோஹகாட் (Lohagad) கோட்டையில், கேட்டன் அகர்வால் (Ketan Agrawal) கொலை வழக்கைத் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கேட்டன் அகர்வால் பள்ளத்தாக்கில் தள்ளிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடம், சமூக ஊடகங்களில் ‘சியா பாயிண்ட்’ (Siya Point) எனப் பரவி வருவதால், அந்த இடத்தை நேரில் காணவே பலர் கோட்டைக்குச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்தச் செயல் சமூக ஊடகங்களிலும், உள்ளூர் மக்களிடையிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த இடத்தை சுற்றுலா ஈர்ப்பாக மாற்றுவது மனிதநேயமற்றது என்றும், பாதிக்கப்பட்டவரின் நினைவுக்கு அவமரியாதை என்றும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம்,’ட்ரூ கிரைம் டூரிசம்’ (True Crime Tourism) என்ற புதிய போக்கு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!