கோலாலம்பூர், ஆக 11 -கோலாலம்பூர் செராஸில் நேற்று காலை மணி 6.40 அளவில் மெர்சடிஸ் கார் ஒன்று Ford Ranger நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் இரு கல்லூரி மாணவர்கள் மரணம் அடைந்தனர். எதிர்திசையிலிருந்து வந்த அந்த மெர்சடிஸ் காரின் 23 வயது ஓட்டுனர் மது அருந்தியிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஷம்சூரி ஈசா
( Zamzuri Isa ) கூறினார். அந்த நபர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
அந்த விபத்தில் Ford Ranger வாகனத்தில் இருந்த 22 வயதுடைய இருவர் கடுமையாக காயம் அடைந்ததால் மரணம் அடைந்த வேளையில் அவர்களது நண்பர் மற்றும் அந்த வாகன ஓட்டுனர் சொற்ப நிலையில் காயம் அடைந்ததாக ஷம்சூரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்த விபத்து குறித்து அறிந்தவர்கள் அது குறித்த தகவல் வழங்க முன்வரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.