Latestமலேசியா

சமூக ஊடக மோசடிகள்; ஒரே ஆண்டில் 1 பில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்த மலேசியர்கள்

கோலாலம்பூர், ஜூலை-30, பல்வேறு சமூக ஊடகங்களில் நிகழ்ந்த மோசடிகள் காரணமாக மலேசியர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் 1 பில்லியன் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளனர்.

தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) அந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதுவே, இணைப் பகடிவதை என பார்க்கும் போது கடந்தாண்டு தினமும் பத்துக்கும் குறையாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவ்வெண்ணிக்கை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது; அதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

சிங்கப்பூரைச் சேர்ந்த Channel News Asia (CAN) நிறுவனத்துடனான நேற்றைய நேர்காணலின் போது அவ்விவரங்களைத் தாம் பகிர்ந்துக் கொண்டதாக ஃபாஹ்மி சொன்னார்.

சமூக ஊடகங்களின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கி புதியக் கட்டுபாடு வருகிறது.

அதாவது, மலேசியாவில் குறைந்தது 80 லட்சம் பதிவுச் செய்யப்பட்ட சமூக ஊடகப் பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்களும், இணையச் செய்தி சேவைகளும், அந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் மூலம், தத்தம் தளங்களில் நிகழும் குற்றவியல் சம்பவங்களுக்கு அந்தந்த சமூக ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டுமென்பதையும் ஃஹாஹ்மி அந்நேர்காணலில் சுட்டிக் காட்டினார்.

மேலும் ஏராளமான மலேசியர்கள் இணையக் குற்றங்களுக்கு ஆளாவதைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் அமைதிக் காக்க முடியாதென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!